தமிழில் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும், 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்கை தொடர்ந்து, தற்போது, இந்த படத்தின் மலையாளம் ரீமேக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும், 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்கை தொடர்ந்து, தற்போது, இந்த படத்தின் மலையாளம் ரீமேக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில், இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று, வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த 'அந்தாதூன்' படத்தின் ரீமேக் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படி சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்தப் படத்தில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது ஆயூஷ்மான் குரானாவுக்கும், சிறந்த இந்திப் படம், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளையும் 'அந்தாதூன்' அள்ளியது.
தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரஷாந்த் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த படத்தை ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஜே.ஜே ஃப்ரெட்ரிக் இயக்குகிறார். தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
'அந்தகன்' என பெயரிப்பட்டுள்ள இந்த படம் குறித்து அவ்வப்போது, படக்குழுவினர் புதிய தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து தற்போது 'அந்தாதூன்' திரைப்படம் மலையாளத்தில் ரீமேக் செய்வது குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ரவி கே.சந்திரன் இயக்க உள்ள இந்த படத்தில், பிருத்விராஜ் ஆயுஷ்மான் குரானா நடித்த ஹீரோ வேடத்தில் நடிக்க உள்ளார். ராஷி கண்ணா, ராதிகா ஆப்தே நடித்த வேடத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Congratulations @dop007 sir https://t.co/KgZOYVdawi
— DD Neelakandan (@DhivyaDharshini) January 24, 2021
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 24, 2021, 5:55 PM IST