anchors commend the surya for height

பொதுவாக உயரம் குறைவாக இருந்தாலே கேலி கிண்டலுக்கு ஆளாவது வழக்கம். இதில் ஹீரோக்கள் மட்டும் விதி விலக்கா என்ன? 

பார்க்க அழகாக இருந்தாலும் உயரம் குறைவு என்றால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக்கப்படுவார்கள்.அதிலும் குறிப்பாக சூர்யா, அனுஷ்காவுடன் இணைந்து நடித்த போது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டார். பாடல் காட்சிகளில் சூர்யாவிற்கு உயரம் பெரிய மைனசாக இருந்தது.

இது இப்படி இருக்க, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குநர் விக்னேஷ் சிவன், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஒரு வசனத்தை வைத்திருந்தார். அதில் "நாம் என்ன உயரம் என்பது முக்கியமில்லை எந்த உயரத்தில் இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்" என்ற இந்த வசனம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் சினிமா கிசுகிசு குறித்து பேசிய இரு தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரத்தை கலாய்க்கும் விதமாக பேசினர்.

அதில் சூர்யா படத்தில் அமிதாப்பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும், இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சியில் சூர்யா ஸ்டூல் போட்டுத்தான் நடிக்க வேண்டும் என ஒரு தொகுப்பாளினி கலாய்த்தார்.

அதற்கு இன்னொரு தொகுப்பாளினியோ இருவரையும் உட்கார வைத்து படமாக்கினால், பிரச்சனையே இல்லை என கிண்டலடித்தார். 

இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த இரண்டு தொகுப்பாளினிகளுக்கும், பதிலடி கொடுத்து வருகின்றனர் சூர்யா ரசிகர்கள். சூர்யா ரசிகர்களுக்கு ஆதரவாக விஜய், அஜித் ரசிகர்களும் அந்த தொகுப்பாளினிகளை வறுத்தெடுக்கின்றனர்.