கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுக்கடுத்துவதற்காக, மத்திய மற்றும் மாநில அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுக்கடுத்துவதற்காக, மத்திய மற்றும் மாநில அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், மக்கள் கொரோனா வைரஸின் விபரீதத்தை உணர்ந்து, செயல் படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் மக்கள் மற்றும் பிரபலங்கள் என யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டில் இருந்தபடி தனக்கு பிடித்த பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக பிரபலங்கள் வீட்டில் சமையல் செய்வது, வீட்டை பெருக்குவது, படம் வரைவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களையும் இதேபோன்று செய்யுமாறு ஊக்குவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகையும், தொகுப்பாளினி ரம்யா வீட்டிலிருந்தபடியே மிகவும் எளிமையாக உடற்பயிற்சி எப்படி செய்ய முடியும் என்பதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் உடற்பயிற்சி செய்ய விரும்பும் 89% பேருக்கு இந்த வீடியோவை நான் பதிவேற்றம் செய்துள்ளேன். கார்டியோ சர்க்யூட் வொர்க்அவுட் நீங்களும் வீட்டில் இருந்தபடியே செய்து பார்த்து உங்களுடைய அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ரம்யா வெளியிட்டுள்ள வீடியோ இதோ:

View post on Instagram