anchor ramya acting samuthirakani wife

இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது படங்கள் பலவற்றில் குணச்சித்திர வேடங்களிலும் கதையின் நாயகனாகவும் நடித்து வருபவர் சமுத்திரக்கனி. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் தற்போது கதாநாயகன் அவதாரம் எடுக்க உள்ளார். இயக்குனர் மணிமாறன் இயக்க உள்ள படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கிறார். அவருடைய மனைவி கதாபாத்திரத்தில் , சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா நடிக்கவுள்ளார்.

இவர் ஏற்கனவே, 'மங்காத்தா', 'ஓ காதல் கண்மணி' போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். தற்போது இந்தப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

கைத்தறி நெசவாளர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்க உள்ள இந்தப் படத்தில், சமுத்திரக்கனி கைத்தறி நெசவாளராக நடிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.