தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலக்கியவர்கள் ஜாக்குலின் மற்றும் ரக்சன். 

ஜாக்குலின்:

ஏற்கனவே ஜாக்குலின் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவி விட்டார். தற்போது நடிகை நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' படத்தில் நயந்தாராவிற்கு தங்கையாக நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து ரக்சன்னும் வெள்ளித்திரையில் கால் பதிகிறார்.

ரக்சன்:

தற்போது ரக்சன் துல்கர் சல்மான் நடிப்பில் அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள 'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்த தகவலை துல்கர் சல்மான் அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.

விஜய் டிவி தொலைகாட்சியில் இருந்து, ஏற்கனவே சந்தானம், சிவகார்த்திகேயன், மா.கா.பா, ஜெகன் உள்ளிட்ட பிரபலங்கள் வெள்ளித்திரையில் கால் பதித்து பிரபலமாகியுள்ள நிலையில் தற்போது ரக்சன்னும் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.