anchor priyanka open talk abot her work

பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக தற்போது பணியாற்றி வருபவர் பிரியங்கா, சமீபத்தில் சிறந்த தொகுப்பாளினிக்கான விருதையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவருடைய வாழ்க்கையில், இவர் சந்தித்த துயரங்கள் பற்றி மனம் திறந்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து இன்று உயரிய நிலையை அடைந்துள்ள இவர், கல்லூரியில் படிக்கும் போது குடும்ப சூழல் காரணமாக ஒரு தொலைக்காட்சியில் அழகு குறிப்பு பற்றிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

பின் ஐபிஎல் யில் பந்து பொறுக்கி போடும் வேலையும் செய்துள்ளார். 

ஒரு முறை ஐபிஎல் போட்டி நடைபெற்றபோது, ஒரு தொகுப்பாளினி சரியாக பேச தெரியாமல் சொதப்பியுள்ளார். இதை பார்த்த ப்ரியங்கா, நான் இதை செய்யலாமா என கேட்டபோது நீ மைக்கை தொடக்கூடாது என அவமானப்படுத்தி வெளியேற்றப்பட்டாராம்.

அதன்பின்னர் அந்த வேலையை நிறுத்திவிட்டு சின்ன மேடைகளில் தொடங்கி தற்போது பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த தகவலை சமீபத்தில் அவர் கூறியுள்ளார்.