anchor pooja divorce her husband

வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நடிகைகளுக்கு மட்டுமே, ரசிகர்கள் இருந்த காலம் மாறி, தற்போது சின்னத்திரை நடிகைகள், செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளினிகளுக்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்த வரிசையில் இருந்த தொகுப்பாளினி 'டிடி 'மற்றும் 'ரம்யா' ஆகியோர் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கணவரை விட்டு தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.

இதே போல பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வந்து பல ரசிகர்களை கொண்ட 'பூஜா', கடந்த 2010 ஆம் ஆண்டு அதே தொலைக்காட்சியில் வேலை செய்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய கணவரை விட்டு தான் பரஸ்பரமாக பிரிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தன்னுடைய முழு கவனத்தையும், நடிப்பில் மட்டுமே செலுத்தி வருவதாக கூறியுள்ளார்.