சின்னத்திரையில் சிறந்த தொகுப்பாளினியாக அனைவரையும் சிரிக்க வைத்து கொண்டிருக்கும் டிடியின் வாழ்க்கையில் பல சோகங்கள் இருந்தாலும், அதனை வெளிக்காட்டாமல் தொடர்ந்து, தன்னுடைய தொகுப்பாளினி பணியையும், நடிகையாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு, தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக இவர்களுடைய திருமணம் நடந்தது.

இதில் பல முன்னணி நட்சத்திரங்கள், சின்னத்திரை நடிகர்கள் அவர்களுடைய குடும்பத்தினர் என அனைவரும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை, 3 ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.

இதை தொடர்ந்து, சமீபத்தில் முதல் முறையாக விவாகரத்து பற்றி பேசிய டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த், டிடிக்கு அதிக ஆண் நண்பர்கள் சகவாசம் இருந்ததாகவும், அவர் இரவு பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொண்டதால் தான் தங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டு, அது விவாகரத்து வரை சென்றதாக தெரிவித்தார்.

அதே போல், டிடி சமீபத்தில் விருது விழா ஒன்றில் பேசியபோது, நம் வாழ்க்கையில் எத்தனை சோகம் இருந்தாலும், காலையில் எழுந்து மேக்அப் போட்டு கொண்டு நம்முடைய பணிக்கு திரும்பிவிட வேண்டும் என சூசகமாக விவகாரத்து பற்றி பேசினார்.

இது ஒரு புறம் இருக்க, தற்போது டிடி இந்த ஆண்டு புத்தாண்டை... வெளிநாட்டில் அதுவும் அவருடைய குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். குறிப்பாக நீச்சல் குளத்தில், பிகினி உடையில்  அவருடைய சகோதரரை கட்டி அணைத்தபடி இவர் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

என்னதான் சகோதரராக இருந்தாலும் இப்படியா டிடி...? பறக்கிறது விமர்சனங்கள்.

அந்த புகைப்படம் இதோ...