anchor divya dharshini shared the mother photo

பிரபல தொகுப்பாளினி டிடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் சிறப்பு நிகழ்ச்சியும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

கடந்த சில மாதங்களாக சுசி லீக்ஸ், மற்றும் விவாகரத்து சர்ச்சையில் இவர் சிக்கி இருந்ததால். நிகழ்ச்சி தொகுப்பிற்கு சிறிது காலம் ப்ரேக் விட்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

பலருக்கும் டிடியையும் அவருடைய சகோதரி பிடியையும் தெரியும் ஆனால் இருவருமே தங்களுடைய அம்மாவை பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிட்டது இல்லை. 

இந்நிலையில் முதல் முறையாக டிடி தன்னுடைய அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி, அவருடைய அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். டிடி ரசிகர்களும் தொடர்ந்து அவரின் அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Scroll to load tweet…