விஜய் டிவி தொலைக்காட்சியில்... காபி வித் டிடி, டான்ஸ் ஜோடி டான்ஸ் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி. இவரின் கலகலப்பான சிரிப்பு, மற்றும் காமெடி நிறைந்த  பேச்சு, ரசிகர்களை கட்டி இழுத்து டிவி முன் அமர வைத்துவிடும்.

இரண்டு முறைக்கு மேல் சிறந்த தொகுப்பாளினிக்கான விருதையும் தட்டி சென்றுள்ளார். திருமண வாழ்க்கை சோகம் நிறைந்ததாக இருந்தாலும், தன்னுடைய கவலையை என்றும் ரசிகர்கள் முன்னிலையில் ஒரு நாள் கூட அவர் காட்டியதே இல்லை.

அதே போல்... ஆயிரம் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டாலும் அவர்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேசி மகிழும் குணம் உடையவர்.

இவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட பலர் இவரிடம் கோபம் வரும்படியான பல சர்ச்சை கேள்விகளை கூட கேட்டனர். ஆனால் டிடி அவை அனைத்திற்கும் மிகவும் கூலாக பதிலளித்தார்.

குறிப்பாக ஒருவர் நீங்கள் தம் நடிப்பீர்களா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிடி.  என் நண்பர்கள் அடித்தால் அவர்களுடன் இருப்பேன், ஆனால் நான் தம் அடிக்க மாட்டேன். தம் அடிக்க மாட்டேன் என தன்னுடைய தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளதாக நெகிழவைக்கும் உண்மையை கூறினார். இவரின் இந்த பதில் ரசிகர்கள் நெஞ்சங்களையே உருக்கும் படியாக இருந்தது என பலர் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.