anchor divya dharshini dance after 3 years
சின்னத்திரையில் பலருக்கும் பிடித்த தொகுப்பாளினி என்றால் அதில் கண்டிப்பாக டிடியின் பெயர் இருக்கும். அந்த அளவிற்கு இவர் மிகவும் கலகலப்பாக நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதை பார்க்கவே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் கால் முட்டியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக இவரால் நீண்ட நேரம் நின்றுக்கொண்டே நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதில் சிரமம் ஏற்ப்பட்டது. இதனால் கடந்த ஓரிரு வருடமாக நிகழ்ச்சி தொகுப்பில் இருந்து ஒதுங்கியே இருந்தார். மேலும் அவ்வபோது ஒரு சில முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்துக்கொல்வதை வழக்கமாகக் கொண்டிருதார்.
தற்போது முழுமையாக இவருக்கு கால் குணமடைந்து விட்டதால், நடிப்பு, ஆல்பம், மற்றும் தொகுப்பாளினி என பல்வேறு விதத்தில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் "என்கிட்ட மோததே" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். அதற்காக அவர் மூன்று வருடங்களுக்கு பிறகு மேடையில் நடனம் ஆடியுள்ளார்.
கால் முட்டியில் செய்துகொண்ட ஆப்ரேஷனுக்கு பிறகு தான் வீல்சேரில் இருந்து மீண்டு தற்போது மீண்டும் உத்வேகத்துடன் திரும்பி வந்திருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும் இவருடைய நடனத்தின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
