விஜய் டிவி தொலைக்காட்சியில், 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளராக கலகலவென்று பேசி, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யா தர்ஷினி. திருமணதிற்கு பின், இவருக்கு காலில் அறுவை சிகிச்சை நடைபெற்றதால் சில காலம்  சின்னத்திரையில் இருந்து விலகியே இருந்தார்.

பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து  வேறுபாடு காரணமாக, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதிலும், அதை பற்றி சற்றும் கண்டு கொள்ளாமல்... அதிரடியாக வெள்ளித்திரை மற்றும் ஆல்பம் பாடல்களில் நடிக்க துவங்கினார். 

இந்நிலையில் இவர் தமிழில், நடிகர் விக்ரமுக்கு நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து, தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பமாக உள்ள விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஒரே மாதிரியான வேளையில் இருந்து கொஞ்சம் தன்னுடைய கவனத்தை திசை திருப்பி, பிரபல வானொலியில் ஆர்.ஜே பணியை கையில் எடுத்துள்ளார். டிடிக்கு சின்னத்திரையில் பல ரசிகர்கள் கிடைத்தாலும், வானொனியில் எந்த அளவிற்கு ஜொலிப்பர் என பொறுத்திருந்து பார்ப்போம்.