anchor dd talk about jothika
ஜோதிகா:
'வாலி' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை ஜோதிகா அக்கா நக்மாவை தொடர்ந்து தமிழ் சினிமாவில் காலடி வைத்தவர். முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர் கோலிவுட் திரையுலகில் தனக்கென மிக பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும், அஜித், விஜய், சூர்யா, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் என்பது நம் அறிந்தது தான்.

சூர்யாவுடன் திருமணம்:
திரைப்படங்களில் நடிக்கும் காலத்தில் இருந்தே நடிகர் சூரியாவும், ஜோதிகாவும் காதலில் கிசுகிசுக்கப்பட்டவர்கள். ஆரம்ப காலத்தில் இவர்கள் தங்களுடைய காதலை மறுத்து வந்தாலும், பின் காதலை ஒற்றுக்கொண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டு நட்சத்திர ஜோடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

ஜோதிக்கவை பற்றி தெரியுமா?
நடிகர் சூர்யா, அகரம் என்கிற அறக்கட்டளை அமைப்பு மூலம் படிக்க வசதி இல்லாத பல மாணவ மாணவிகளுக்கு உதவிகள் செய்து வருகிறார்.மேலும் பல விழுப்புணர்வு நிகழ்சிகளில் கலந்துக்கொண்டு அவரால் முடிந்த பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்பது நமக்கு தெரியும், ஆனால் இவரை பற்றி தெரிந்த அளவிற்கு ஜோதிகாவை பற்றி தெரிய வாய்ப்பில்லை.
ஜோதிகாவை பற்றி பேசிய டிடி:
பலருக்கும் பிடித்த தொகுப்பாளினி டிடி ஜோதிகாவிற்கு மிகவும் நெருங்கிய தோழி. இதனால் ஜோதிகாவின் வீட்டில் நடைப்பெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கு டிடிக்கும் அழைப்பு விடுத்தாராம், அப்போது பலரும் வீட்டில் வீட்டில் இருக்க, ஜோதிகா தன் வீட்டில் வேலை செய்துக்கொண்டிருந்த வேலைக்காரர்களை அழைத்து முதலில் சாப்பிடுங்கள் என்றாராம்.

அவர்கள் சாப்பிடும் வரை குழந்தைகளை பார்த்துக்கொள்வது முதல், வீட்டிற்கு வந்தவர்களை கவனிப்பது வரை அனைத்து வேலைகளையும் ஜோதிகாவே பார்த்ததாக டிடி சமீபத்தில் ஒரு பொது மேடையில் கூறியுள்ளார்
