anchor dd first time talk about divource

பிரபலங்கள் பலரின் வாழ்த்துக்களோடு... திருமண பந்தத்தில் இணைத்தவர் தொகுப்பாளினி 'டிடி'. இப்படி மிக பிரமாண்டமாக நடந்த இவர் திருமணம் மீது யார் கண் பட்டதோ? தெரியவில்லை... தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இவருடைய திருமண முறிவிற்கு பல கரணங்கள் கூறப்பட்டாலும், டிடி என்ன காரணம் சொல்ல போகிறார் என்பது தான் பலரின் எதிர்பார்ப்பு. நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது முதல் இது வரை டிடி இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் மெளனமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக இவர் தொகுத்து வழங்க உள்ள, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியில் முதல் முறையாக ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இவரும் பதில் கூற உள்ளாராம்.

மேலும், விவாகரத்து குறித்தும் இதில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் இவருடைய விவாகரத்து குறித்து பரவலாக பேசப்படுவது, இருவருக்கும் எற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணமாம்.