சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினியான ராதிகா கௌசிக் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் சமீப காலமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் பற்றி கேள்விப்பட முடிகிறது. இந்த தருணத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் வேலை செய்யும் தொகுப்பாளினியான ராதிகா கௌஷிக் தனது காதலருடன் ஏற்பட்ட கடும் சண்டை காரணமாக மன உளைச்சலில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த சம்பவத்தன்று ராதிகாவுடன் அதே அறையில் அவரது காதலர் ராகுல் தங்கியுள்ளார் அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறு காரணமாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் மன உளைச்சல் தாங்கமுடியாமல் அதே கோபத்துடன் மாடியில் இருந்து குதித்து உள்ளார்
இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை மேற்கொண்ட போலீசார் ராதிகாவின் தற்கொலைக்கு என்ன காரணம் அவர் தானாகவே தற்கொலை செய்து கொண்டாரா அல்லது காதலன் தள்ளிவிட்டுவிட்டாரா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராதிகா கௌஷிக் தற்கொலைக்கு காரணம் , ராகுல் உடனான காதல் தான் என்றும், இவர்கள் இருவரும்  சில  மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

எனவே இவருடைய தற்கொலைக்கு ராகுல் முக்கிய காரணமாக  இருக்கக்கூடும் என்பதால், இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.