anchor anjana left the sunmusic

கடந்த 10 ஆண்டுகளாக பிரபல தனியார் தொலைக் காட்சியில், தொகுப்பாளராக பல்வேறு நிகழ்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் அஞ்சனா. இவருக்கென சின்னத்திரையில் மிகப் பெரிய ரசிகர் கூட்டமும் உள்ளது.

இவர் நடிகர் 'கயல் சந்திரனை' திருமணம் செய்துகொண்ட பிறகும் தொடர்ந்து இந்த நிகழ்சிகளை தொகுத்து வழங்குவேன் எனக்கூறி இருந்தார். அதன்படி தொடர்ந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். மேலும் இசை வெளியீட்டு விழாக்களிலும் பங்கேற்று நிகழ்ச்சித் தொகுப்புகளிலும் கலந்து கொண்டு வந்தார். 

இந்நிலையில் தற்போது 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தொகுத்து வழங்கி வந்த லைவ் ஷோவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…