முரட்டுத்தனமா படு லோக்கலாக சந்தானம் தாம்பத்தவைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த நேரத்தில் இன்னும் அந்த சர்ச்சை போஸ்டரை பற்றி வாய்திறக்காமல் இருக்கிறார் அன்புமணி.

கடந்த வருடம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தின் போஸ்டரில் விஜய் புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த  போஸ்டரில், வாயில் சிகரெட்டோடு படு இளமையாக, ஸ்டைலிஷாக கருப்பு நிற உடையுடன் காட்சியளிக்கும்  விஜய் புகைப்பிடிக்கும் காட்சியால் கோபத்தில் கொந்தளித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தனது சமூகவலைதள பக்கத்தில் விஜய் தனது அடுத்த படத்தின் போஸ்டரில் புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பது போல போஸ் கொடுத்திருப்பதால் அவமானப்படுகிறேன், தனது அடுத்த டிவீட்டில், அந்த சிகரெட் மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் ஸ்டைலாக நீங்கள் காட்சி தருவீர்கள்,என்று பதிவிட்டிருந்தார்.   

இந்நிலையில், இன்று காலை சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படமான "டகால்டி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கவுண்டமணியின் டிரேட்மார்க் வசனமாக கருதப்படும் டகால்டி என்ற வார்த்தையை படத்தின் தலைப்பாக பயன்படுத்தியுள்ளனர். இந்த டகால்டி படத்தின் போஸ்டரில் சந்தானமும் செம்ம ஸ்டைலாக முரட்டுத்தனமாக தம் பத்தவைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. 

இந்த காட்சி செம தூளாக, பக்கா லோக்கலாக காணப்படுகிறது. பார்த்ததும் சர்ச்சையை கிளப்பும் வகையில் போஸ்டரை ரிலீஸ் செய்தும், வழக்கமாக முதல் முதலாக கண்டன அறிக்கைவிடும் பாமக தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் இன்னும் வெளியாகவில்லை. காரணம் அன்புமணிக்கு சந்தானத்தின் மீதான சமூதாய பாசம் தான் காரணம் என சொல்லப்படுகிறது.  அதுமட்டுமல்ல சந்தானத்திற்கும் பாமகவுக்கும் இடையே ஒரு நல்ல உடன்பாடு இருந்து வருகிறது. சந்தானத்தின் அப்பா இறந்தபோது கூட அன்புமணி நேரில் சென்று சந்தானத்திற்கு ஆறுதல் கூறி இருக்கிறார். அதே போல வெகு நாட்களுக்கு முன்னர் சந்தானத்திற்கும் வேறு ஒரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட விவகாரத்தில் கூட சந்தானத்திற்காக முன்வந்து உதவி இருக்கிறது பாமக. 

இப்படி இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கையில், சந்தானத்திற்கு எதிராக கொட்டாவி கூட விடமாட்டார் அன்புமணி  என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.