anbuchezhiyan is not torcher me devayani open talk

சுப்ரமணியபுரம், தார தப்பட்டை ஆகிய படங்களுக்கு இணை தயாரிப்பாளராக இருந்தவர் அசோக் குமார். இவர் அன்புச்செழியன் என்கிற பைனான்சியரிடம் கந்து வட்டிக்கு வாங்கியதாகவும், அதனை உரிய நேரத்திற்குள் செலுத்தாமல் இருந்ததால், அன்புச் செழியன் அசோக் குமாரை மிரட்டியதால் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் திரையுலகைச் சேர்ந்த பலர் இவரிடம் கந்து வட்டி பிரச்சனையில் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. அதில் அஜித், தேவயானி , ரம்பா போன்ற பல நடிகர்களும் அன்புவிடம் கந்து வட்டி பெற்றவர்கள் என ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகை தேவயானி, ஒரு பேட்டி கொடுத்துள்ளார் அதில், அன்புச்செழியனிடம் கடன் பெற்றது உண்மை தான். ஆனால் நான் என் படத்தை முடிக்கும் போது தான் அவரைச் சந்தித்தேன். அவர் இதுவரை தன்னை எந்தக் கொடுமையும் செய்ததில்லை நான் பார்த்தவரை அன்பு மிகவும் அன்பான மனிதர் என தேவயானி சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளார். 

அதேபோல் அவர் என்னையும் என் கணவரையும் கொடுமைப்படுதினார் என்று பரவும் தகவல் பொய் என்று விளக்கம் கொடுத்தார். முதலில் அன்புவிற்கு எதிராக ஒரு சிலர் கருத்துக் கூறி வந்த நிலையில் தற்போது பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.