anbuchezhiyan is a goodman...iman give certificate
பைனான்சியர் அன்புசெழியன் மிகவும் நல்லவர் என்றும்இ தனிப்பட்ட முறையில் அவரை ஒரு நல்ல தயாரிப்பாளராகத்தான் தான் பார்ப்பதாகவும் இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.
கந்துவட்டிபிரச்னையால்தற்கொலைசெய்துகொண்டஇயக்குநர் சசிகுமாரின் மைத்துனரும், திரைப்பட தயாரிப்பாளருமான அசோக்குமாருக்குஆதரவாகவிஷால்உள்ளிட்டதிரையுலகினர்ஏராளமானோர் , பைனான்சியர்அன்புச்செழியன்மீதுபல்வேறுபுகார்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் பார்த்திபன், இயக்குநர்கள் அமீர், கரு.பழனியப்பன், விஷால் உள்ளிட்டோர் அன்புசெழியன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து அன்புசெழியன் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சனை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இயக்குநர் சுசீந்திரன், பைனான்சியர் அன்புசெழியனால் ஒட்டுமொத்த திரையுலகமே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நடிகர் அஜித், இயக்குநர் லிங்குசாமி போன்றோரும் அவரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறினார். மேலும் எந்த படத்துக்கு இசையமைக்க வேண்டும் என இசையமைப்பாளர் இமானை, அன்புசெழியன் மிரட்டி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக சசிகுமாரிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
அதே நேரத்தில் அன்புசெழியனுக்கு ஆதரவாகதிரையுலகில்நடிகைதேவயானி, சுந்தர்.சி, சீனு ராமசாமி, மனோபாலா, பாலா போன்ற சினிமா பிரபலங்கள்களம்இறங்கியுள்ளநிலையில்இசையமைப்பாளர்இமான்அவருக்குஆதரவாகவீடியோஒன்றைவெளியிட்டுள்ளார்.

அதில், வெள்ளைகாரதுரை , மருதுபோன்ற திரைப்படங்களில்அவருடன்தான்வேலைசெய்துள்ளேன்என்றும் அதன்தயாரிப்பாளராகஅவரைதனக்குத்தெரியும் என்றும் அமான் தெரிவித்துள்ளார்.
பொதுவாவேஅவர்நல்லவர். பாடல்சம்பந்தப்பட்டவிஷயங்களில்எங்களுக்குள்நல்லநட்புஉண்டு. அவர்பற்றியவிமர்சங்கள்அதிகம்எழுகிறது. தனிப்பட்டமுறையில்நான்அன்புசாரைநல்லதயாரிப்பாளராகத்தான்பார்க்கின்றேன். எனஅந்த வீடியோ பதிவில் இமான் தெரிவித்துள்ளார்.
