பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் சங்கீத வித்வான் 'ஆனந்த் வைத்தியநாதன்' வெளியேற்றப்பட்டார். மொத்தம் நான்கு நபர்கள் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், முதலில் நித்யா, பாலாஜியிடம் பேசிய கமல். அவர்களிடம் சில கேள்விகளை கேட்ட பின்பு இந்த நிகழ்ச்சியில் நீங்கள் வெளியேற போவதில்லை என்று அறிவித்தார்.

 

இவர் இதனை கூறியதுமே பல நாட்களுக்கு பின் நித்யா மற்றும் பாலாஜி இருவரும் கட்டிப்பிடித்து தங்களுடைய அன்பை பரிமாறிக்கொண்டனர்.

இதை தொடர்ந்து நாமினேஷன் லிஸ்டில் இருந்த, பொன்னம்பலம் மற்றும் ஆனந்த் வைத்தியநாதனிடம் ஒரு சில கேள்விகளை எழுப்பிய பின், இன்றைய தினம் நிகழ்ச்சியில் இருந்து ஆனந்த் வெளியேற்றப்படுவதாக அறிவித்தார். 

ஆனந்த் வெளியேறுவதற்கு முன்பு, அவரிடம் இந்த வீட்டில் யாரை ஜெயிலில் அடைப்பீர்கள் என்றும், அதற்கான காரணம் என்ன என்றும் கமல் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஆனந்த், பெண்கள் எப்போதும் மதிக்க வேண்டும். அவர்களுக்கான லிமிட் அவர்களுக்கு தெரியும். எனவே அவர்களுடைய ஒழுக்கம் குறித்து பேசிய பொன்னம்பலத்தை ஜெயிலில் அடைப்பதாக கூறினார். 

மக்கள் மனநிலை:

ஆனந்தின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். மேலும் பொன்னம்பலத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்கள். 

"குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ரசிகர்கள் ஒரு நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள் என்றால். அதற்கு ஏற்றபோல் நாமும் கண்ணியத்தோடு நடந்துக் கொள்ள வேண்டும். என பொன்னம்பலம் கூறியதற்கு ரசிகர்கள் மட்டும் அல்ல தொகுப்பாளர் கமல் கூட வரவேற்பு தந்த நிலையில் ஆனந்த் வைத்தியநாதன் இவருக்கு சிறை தண்டனை கொடுத்ததை பலர் விமர்சித்து வருகிறார்கள்.

முகம் சுழித்த சம்பவங்கள்:

பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது அரங்கேறும் பல சம்பவங்கள் முகம் சுழிக்கும் விதத்தில் உள்ளது அனைவரும் அறிந்தது தான். குறிப்பாக யாஷிகாவை அவ்வப்போது கட்டிபிடிக்கும் மகத்தின் செயல். ஐஸ்வர்யா மற்றும் ஷாரிக் ஒரே பெட்டில் அடித்த கூத்து அதை கண்டித்த மும்தாஜ் உள்ளிட்டவை. 

இந்த சம்பவங்கள் உண்மையில் பிக்பாஸ் வீட்டில் ஒழுக்கம் இல்லாமல் இருப்பதை உணர்த்தும் விதத்தில் உள்ளதை ஆனந்த் வெளியேறியதும் தெரிந்துக் கொண்டு பொன்னம்பலத்திற்கு வழங்கிய தண்டனை தவறு என உணர்வாரா? பொறுத்திருந்து பார்போம்.