தமிழக முதலமைச்சராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் ஜெயலலிதா இருந்தவரை தமிழ் திரையுலகம் அவருக்கு பெரும் ஆதரவு கொடுத்து வந்தது.
இதனால் பல நடிகர்கள், நடிகைகள் ஜெயலலிதாவிற்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவில் இணைந்து, தேர்தலின்போது அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்து வந்தனர். அவர்களில் ஒருவர் பிரபல வில்லன் நடிகர் ஆனந்த்ராஜ்
இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி ஜெயலலிதா மறைந்தார். அவர் வகித்த வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை தேர்வு செய்ய நாளை அதிமுக பொதுக்குழு கூடுகின்றது.
இந்நிலையில் இந்த பொதுக்குழுவில் தனக்கு அழைப்பு இல்லை என்ற காரணத்தால் அதிமுகவில் இருந்து நடிகர் ஆனந்த்ராஜ் விலகியுள்ளதாக சற்றுமுன்னர் தகவல் வெளிவந்துள்ளது.
இவர் கடந்த 12 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
