ananad vaithiyanathan may go out first from bigboss 2

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. நடிகர் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், முதலில் வெளியேறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது

16 போட்டியாளர்களை கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் முதலில் வெளியேறப்போவது ஆனந்த் வைத்தியநாதன் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சென்ற ஆண்டு நடைப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓரளவிற்கு வயது குறைந்தவர்கள் கலந்துக்கொண்டனர்.

ஆனால் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் "இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை மட்டுமே குறைந்த வயது நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

யாஷிகா அனைவரிடமும் நன்றாக பேசி வருகிறார். அதே போன்று அனைவரையும் விட வயதில் மூத்தவரான ஆனந்த் வைத்தியநாதன் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக தெரிகிறது.

இதற்கு அடுத்த படியாக நடிகை மும்தாஜ் என கூறப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக நடிகை ரித்விகா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெட்ராஸ் மற்றும் கபாலி பட நடிகையான ரித்விகா சக போடியாளர்களுடன் சரிவர பேசாமல் இருப்பதால் இவரும் விரைவில் வெளியேறுவார் என கூறப்படுகிறது

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 தொடங்கி முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லை என பிக்பாஸ் கமல் தெரிவித்து விட்டார். ஆனால் இது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் முதலில் யார் வெளியே செல்ல போகிறார்களோ என புலம்ப ஆரம்பித்து உள்ளனர்.