பொதுமக்களிடம் அநாகரீமாக நடந்துகொண்ட கன்னட நடிகருக்கு மக்கள் பதிலுக்கு தர்ம அடிகொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்த நடிகர் சற்று நட்டு கழண்டவர் போல் நடந்துகொண்டு அடிக்கடி இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.

கன்னட நடிகர் ஹூச்சா வெங்கட். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்கலை வித்தகர். அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் இவர், நடிகை ஒருவர் தன்னை காதலிக்கவில்லை என்பதற்காக தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் நேற்று குடகுக்கு சென்றிருந்தார்.அங்கு சாலையில் நின்றிருந்த கார் ஒன்றை அவர் திடீரென்று கதவை இழுத்தும் கல்லால் எறிந்தும் தாக்கினார். முதலில் அது ஏதோ படப்பிடிப்பு என்று மக்கள் நம்பிக்கொண்டிருக்க ஹூச்சா வெங்கட்ட்டின் அராஜகம் அத்துமீறிப்போனது. சாலையில் நடக்கிறவர்களையெல்லாம் இழுத்துப்போட்டு அடிக்க ஆரம்பித்தார்.

 இதையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிலர் திடீரென்று சரமாரியாக அவரை பதிலுக்குத் தாக்கத் தொடங்கினர்.இது தொடர்பாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து வந்து வெங்கட்டை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.வெங்கட் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.