amy jakcson drop the south indiyan movies acting

மதராசபட்டினம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக காலடி எடுத்துவைத்தவர் லண்டன் நடிகை எமிஜாக்சன். பின் வேலையில்லா பட்டதாரி, கெத்து, ஐ, மற்றும் 2 . 0 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

இவருக்கு தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வந்ததால் சமீப காலமாக சென்னையிலேயே ஒரு அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்தார். தற்போது இவருக்கு "சூப்பர் கேர்ள்" என்கிற ஹாலிவுட் சீரிஸில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்துள்ளதால் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார்.

இது குறித்து தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் "2018ல் இது தான் என் வீடு என வந்த 5 நிமிடத்தில் முடிவெடுத்துவிட்டேன்" என கூறியுள்ளார். அதனால் அவர் இந்திய படங்களில் இனி நடிக்கும் வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகும் குயீன் படத்தில் கமிட் ஆகியிருந்த எமி சமீபத்தில் இந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…