மம்மியான பிறகும் பிட்னஸில் கவனமாக இருக்கும்  எமி ஜாக்சன் தனது ஹீரோயின் லுக்கை குலையாமல் பாதுகாத்து வருகிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஸ்டைல் லுக் புகைப்படங்களை பதிவிட்டு வரும் எமி ஜாக்சன், நேற்று பதிவிட்ட புகைப்படம் ஒன்று ஒரே நாளில் 5 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது. 

வழக்கமாக தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பிறகு நடிகைகள் நடிப்பது என்பதே அரிதான ஒன்று. அதுவும் மம்மியான பிறகு ஹீரோவின் அண்ணி, அக்கா, அம்மா கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அதனால் தான் நிறைய நடிகைகள் தங்களது காதல் விவகாரத்தை கூட வெளியில் தெரியாமல் மிக ரகசியமாக பாதுகாப்பார்கள். ஆனால் இதை எல்லாம் ஆரம்பம் முதலே உடைத்து வந்தவர் எமி ஜாக்சன். மதாரசப்பட்டினம் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் தெறி, தனுஷ் உடன் தங்க மகன், விக்ரமின் ஐ, ரஜினியின் 2.O உள்ளிட்ட படங்களில் ஹிட் படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். 

ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து வந்த எமி ஜாக்சன், அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எவ்வித ஒளிவு மறைவும் இன்றி சோசியல் மீடியாவில் பரவவிட்டார். தான் கர்ப்பம் அடைந்த செய்தியையும் சகஜமாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். எமியின் பிரக்னன்ஸி பெல்லி போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம வைரலானது. அதன் பின்னர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக, மருத்துவமனையில் குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை எமி வெளியிட, ரசிகர்கள் செம குஷியாகினர். இன்ஸ்டாகிராம் பதிவைப் பார்த்த திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் எமிக்கு வாழ்த்து கூறினர். 

View post on Instagram

மம்மியான பிறகும் பிட்னஸில் கவனமாக இருக்கும் எமி ஜாக்சன் தனது ஹீரோயின் லுக்கை குலையாமல் பாதுகாத்து வருகிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஸ்டைல் லுக் புகைப்படங்களை பதிவிட்டு வரும் எமி ஜாக்சன், நேற்று பதிவிட்ட புகைப்படம் ஒன்று ஒரே நாளில் 5 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது. உடனே எமி ஜாக்சன் உடைய புது லுக் ஏதாவது வந்திருக்கான்னு தேடாதீங்க. அது எமி உடைய செல்ல மகன் ஆண்ட்ரிஸ் உடைய புகைப்படம். அம்மா பக்கத்தில் ஜம்முன்னு படுத்திருக்கும் ஆண்ட்ரிஸ், அழகாக கண் திறந்து பார்க்கும் புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது. அம்மா, குழந்தை இருவரும் ஒரே நேர உடையில் இருக்கும் அந்த போட்டோவுடன் Light of My Life என எமி ஜாக்சன் பதிவிட்டுள்ளார்.