இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'மதராசபட்டினம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லண்டன் நடிகை 'எமி ஜாக்சன்'.

இந்த படத்தை தொடர்ந்து, விஜய், தனுஷ், விக்ரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என முன்னணி நடிகர் படங்களில் நடித்தார். மேலும் ஹோலிவுட்டில் 'சூப்பர் கேர்ள்' என்கிற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

எப்போதும் பிஸியாகவே இருக்கும் இவர், அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயதார்த்தம் நிறைவு பெற்ற நிலையில், ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் திடீர் என எமி ஜாக்சன்,  தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும் அவ்வப்போது தன்னுடைய காதலருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளிட்டு வருகிறார்.

ஏப்படியும்  இவருக்கு இந்த வருடம் குழந்தை பிறந்து விடும் என கூறப்படுகிறது. இதை தொடந்து தற்போது தன்னுடைய திருமண தேதி குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் எமி. வரும் 2020ஆம் ஆண்டு தனக்கும் ஜார்ஜூக்கும்  கிரிஸ் நாட்டில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும்,  இந்த திருமணத்திற்கு முக்கிய பிரபலங்களை அழைக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். 

அடுத்த வருடம் தான் திருமணம் என்பதால், தன்னுடைய காதலரை குழந்தையுடன் கை பிடிப்பார் எமி என கூறி, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.