நடிகை எமி ஜாக்சனின் மார்பகத்தில் காதலன் கை வைத்தபடி இருக்கும் வீடியோ ஒன்று வெளியானதால் திடீர் சர்ச்சை எழுந்துள்ளது.
மதராசப்பட்டிணம் படத்தின் மூலமாக, தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் எமி ஜாக்சன். லண்டனை சேர்ந்த இவர், மாடலிங் தொழில் செய்து வருகிறார். தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன கையோடு, இந்தி படங்களிலும் நடிக்கத் தொடங்கிய எமி ஜாக்சன் தற்போது சர்வதேச அளவில் தனது நடிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். அத்துடன், சென்னையில் உள்ள பிரபல துணிக்கடையின் விளம்பரத்திலும் நடித்து வருகிறார்.தற்சமயம் ரஜினிகாந்த் ஜோடியாக, ஷங்கர் இயக்கும் எந்திரன் 2.0 படத்தில் எமி ஜாக்சன் நடிக்கிறார். இந்தியில் ஏக் தீவானா தா என்ற படத்திலும் அறிமுகம் ஆன அவர், விக்ரம் ஜோடியாக நடித்த ஐ படத்தின் மூலமாக, பெரும் வரவேற்பு பெற்றார். இந்நிலையில், எமி ஜாக்சன் அவரது காதலருடன் நெருக்கமாக இருப்பதை போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது. அதில், எமி ஜாக்சனின் மார்பகத்தை பிடித்தபடி அவரது காதலன் இருப்பதாகவும், இதை கவனிக்காமல் அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆனால், இந்த வீடியோ எமி ஜாக்சனின் கவனத்திற்கு வராமல் அவரது காதலன் வெளியிட்டுள்ளார் என்றும், 2 பேரும் தற்போது விடுமுறைக்காக ஜாலியாக சுற்றுலா சென்றபோது எடுத்த போட்டோ இது என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதேநேரத்தில் விளம்பரத்திற்காக இந்த வீடியோவை எமி ஜாக்சன் வேண்டுமென்றே வெளியிட்டிருக்கலாம் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. எது எப்படியோ, நெட்டிசன்களுக்கு டிரெண்டிங் செய்ய கிளுகிளுப்பான சமாச்சாரம் கிடைத்துவிட்டது என்பதே இதில் முக்கியம்…