இந்த வருட புத்தாண்டை, நடிகை எமி ஜாக்சன் அவருடைய காதலருடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதை தொடர்ந்து எமியின் காதலருடைய சொத்து விவரங்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியாகி உள்ளது.

நடிகை எமி ஜாக்சன், இங்கிலாந்தில் வசிக்கும் தொழிலதிபர் ஜார்ஜ் பெனாய்ட் என்பவரை சமீப காலங்களாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது இவர்களுடைய  நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக  கூறப்படுகிறது.  விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எமி ஜாக்சனுக்கு, இது நான்காவது காதல், ஏற்கனவே இந்தி நடிகர் பிரகத் பாபர் , அடுத்து பாக்சர் ஜோ சில்க்ரிக் ஆகியோருடன் காதலில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான். கடைசியாக 22வயது நடிகரான தாமஸுடன் ஆறு மாதங்கள் சேர்ந்து வாழ்ந்து பிரிந்தார்.

இவர்களை தொடர்ந்து,  சமீபகாலங்களாக பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் பெனாய்ட்டுடன் காதலில் உள்ளார். இருவரும் தற்போது தங்களுடைய காதலை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இருவரும்  திருமணத்திற்கு தயாராகி உள்ளதாகவும் இதற்க்கு இருவர் வீட்டிலும் பச்சை கொடி காட்டியதால், தற்போது நிச்சயதார்த்த நிகழ்ச்சி அரங்கேறி உள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் பரவலாக கூறப்படுகிறது.

 மேலும் தற்போது ஜார்ஜ் பெனாய்ட்வின் சொத்து விவரம் வெளியாகி கேட்பவர்களை தலைசுற்ற வைத்துள்ளது.  இவருக்கு இருக்கும் மொத்த சொத்தின் மதிப்பு 400 மில்லியன் பவுண்டுகள்.  இது இந்திய மதிப்பில் ரூபாய் 3 ஆயிரத்து 500 கோடிக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. புடிச்சாலும் புளியம் கொம்பாய் பிடித்து விட்டார் எமி என  அவருடைய ரசிகர்கள் இப்போதே திருமண வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள் .