கர்ப்பமாக இருந்த சமயத்திலும் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைத் தொடர்ந்து தர்மசங்கடமான புகைப்படங்களைப் பதிவிட்டு வந்த நடிகை எமி ஜாக்‌ஷனுக்கு இன்று சற்று முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். 

ஏ.எல்விஜயின் ‘மதராசப்பட்டினம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில்  அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ’ஐ’, ’2.0’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் ’2.0’ படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.  கடந்த ஆண்டு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். பின்னர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அதிர்ச்சி அளித்தார்.

அதனை தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.கர்ப்பமான பிறகு பெண்கள் தங்கள் புகைப்படங்களைத் தவிர்த்துவிடுவார்கள் என்னும் நிலையில் எமி தனது புகைப்படங்களைத் திகட்டத் திகட்ட வெளியிட்டு வந்தார். இந்த சம்பவங்களின் உச்சக்கட்டமாக இரு மாதங்களுக்கு முன்பு நீருக்கடியில் ஒரு ஃபோட்டோ செஷனே நடத்தி படங்களை வெளியிட்டுப் பரபரப்பாக்கினார்.

இந்நிலையில் தனக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்தபடி சற்றுமுன்னர் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அச்செய்தியை அவரது காதலர் ஜார்ஜ் பெனாய்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குழந்தை பிறந்த பிறகுதான் எங்கள் திருமணம் நடக்கும் என்று எமி ஜாக்‌ஷன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.