ஷங்கரின் ‘ஐ’ படம் செம்ம ஃபிளாப்தான். ஆனாலும் அந்தப் படத்தை இளசுப் பட்டாளம் கொடி பிடித்துப் போய் பார்க்க காரணம் ‘எமி’தான். யம்மாடியோவ்வ்வ்வ்!...எனுமளவுக்கு அதில் தன் கவர்ச்சியை அள்ளியிறைத்து ரசிகனின் கண்களில் கொட்டியிருப்பார் எமி. அந்தளவு கவர்ச்சியை 2.0வில் பார்த்து ரசிகன் எதிர்பார்த்து, ஏமாந்தது தனிக் கதை. 

அது கிடக்கட்டும். லண்டன் பேபியான எமியின் பர்ஷனல் டைரிதான் இப்போது கோடம்பாக்கத்தில் செம்ம ஹாட்டு. எமிக்கும், இங்கிலாந்தை சேர்ந்த ஜார்ஜ் எனும் படா பெடா தொழில் அதிபருக்கும் கூடிய விரைவில் கல்யாணம். ஜார்ஜ் உடன் தானிருக்கும் அஹாஜுஹா பர்ஷனல் போட்டோக்கள் சிலவற்றை இன்ஸ்டாவில் பதிவேற்றியிருக்கிறார் எமி. இதைப் பார்த்து அவரது பழைய காதலர்கள் கதறிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

 

எமியின் பழைய காதலர்களா?...யெஸ், தஸ்க்குபுஸ்க்குன்னு கனிஞ்ச தக்காளியாக இருப்பவர்களே நாலஞ்சு பாய் ஃப்ரெண்ட்ஸ் வெச்சிருக்கும் போது, எக்குதப்பான ஸ்ட்ரக்சருடன் இருக்கும் எமிக்கு காதலர்கள் இருக்க மாட்டார்களா என்ன? ஆறே வருஷத்தில் மூன்று காதலர்களை மாற்றிவிட்டார் எமி! என்று லிஸ்ட்டு போட்டு கஸ்டப்படுது எமியை நினைத்து எக்கச்சக்கமாக ஏங்கும் ரசிகர் கூட்டம். 

எமியின் முதல் காதலர் பிரதீக் பப்பர். இப்போ இருந்து சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னாடி உருவான லவ்ஸ் இது. பாலிவுட் நடிகரான பப்பரும், எமியும் சால்ட் அண்டு பெப்பராய் கலந்து வலம் வந்தனர். பிறகு இந்த காதல் ஊற்றிக் கொண்டது. பிறகு, ஐரோப்பிய நாடுகளில் ஃபேமஸான பாக்ஸரான செல் கிர்க் உடன் எமி சுற்றலானார். அந்த பாடி மனிதரும், இந்த கிக் லேடியும் ஐரோப்பிய கடற்கரைகளில் சன் பாத் எடுக்கும் காட்சிகள் அமிஞ்சகரை வரை அவரது ரசிகர்களை அழ வைத்தன. ஆனால் முரட்டு பீஸான கிர்க்கின் பிஹேவியர் எமிக்கு பெரிதாய் செட் ஆகவில்லை. கிர்க் ஓவராய் ஜெர்க்  விட்ட நேரத்தில் உடைந்தது லவ். 

இதன் பிறகு சமீபத்தில் பிஸ்னஸ் மேன் ஜார்ஜை தன் ஹேண்ட் பேக்கில் பதுக்கிவிட்டார் எமி. ஜார்ஜின் பிஸ்னஸ் ப்ரொஃபைலை பார்த்தால் அவனவனுக்கு தலை சுற்றுகிறது. அம்மாஆஆஆஆஆம் பெரிய பெணக்காரர். சர்வதேச அளவில் ஹோட்டல் பிஸ்னஸில் கொடி கட்டி பறக்கும் குடும்பம். ஆனால் அந்த மனிதரோ எமி மீது எக்கச்சக்க காதலில் கிடந்து தவிக்கிறார். ஓவர் பொசஸிவ்வாக ஜார்ஜ் இருந்தாலும் கூட, அவரது ரேஞ்ச்தான் எமியை எக்கச்சக்கமாக உருக வைத்திருக்கிறது. கூடிய விரைவில் மோதிரம் மாற்ற இருக்கிறது இந்த ஜோடி. ரிசப்ஷனுக்கு நம்ம சூப்பருக்கும், ஷங்கருக்கும் நிச்சயம் அழைப்பு இருக்கும்!