நடிகை எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான 'மதராசப்பட்டினம்' திரை படம் மூலம் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். இந்த படத்தை தொடர்ந்து 'வேலையில்லா பட்டதாரி', 'ஐ' , '2.௦' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

அவ்வப்போது, கவர்ச்சி உடைகளுடன் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் எமி ஜாக்சன், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இதுவும் இது கனவா நிஜமா என யோசிக்க வைத்துள்ளது.

அன்மையில் எமிக்கும்  George Panayiotou என்பவருக்கும்   நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  விரைவில் திருமணமும் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.  இந்நிலையில் தன்னுடைய காதலருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த எமி ஜாக்சன் தற்போது கர்ப்பமாக உள்ளதாக அவரே தகவலையும் கூறி,  புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.  இது ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.