amy jackon introduce in producer
"மதராசபட்டினம்" படத்தில் கதாநாயகியாக அறிமுகம் கொடுத்த எமி தற்போது முன்னணி கதாநாயகிகள் படங்களில் நடித்து வந்ததையும் தாண்டி தற்போது சூப்பர் ஸ்டார் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.
எமிஜாக்சன் தற்போது நாடியை என்பதையும் தாண்டி தயாரிப்பாளராக மாறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் தயாரிக்கவிருப்பது திரைப்படம் அல்ல என்பதும், அது ஒரு குறும்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை எமிஜாக்சன் விலங்குகள் நல ஆர்வலர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை தோலுரிக்கும் வகையில் குறும்படம் ஒன்றை எமி ஜாக்சன் தயாரிக்கவுள்ளார்.
இந்த படத்தில் எமி நடிக்கவில்லை என்றாலும் விலங்குகளுக்கு எதிராக நடந்த கொடுமைகள் குறித்த தனது அனுபவங்களை அவர் குரல் வடிவில் கூறவுள்ளார். இந்த குறும்படத்தில் சில உண்மைச்சம்பவங்களும் இணைக்கப்பட்டுள்ளதாம்.
விலங்குகள் மீதான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற குறும்படங்கள் அவசியம் ஆகிறது என்றும், இந்த விஷயம் அனைவரும் சீரியஸாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் எமிஜாக்சன் கூறியுள்ளார்.
