பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், அனைவரும் அசந்து போகும் வகையில் தீபாவளி விருந்து கொடுத்துள்ளார்.

இதில் அமிதாப்பின் நெருங்கிய நண்பரான இளைய திலகம் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு என குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

அதே போல் மலையாள ஸ்டார்கள் மம்மூட்டி, நடிகர் ஜெயராம், தெலுங்கு ஸ்டார் நாகார்ஜூனா போன்ற பலர் இந்த நிகழ்ச்சியில் தங்கள் குடுபத்தினரோடு கலந்து கொண்டுள்ளனர்.

பல நடிகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், ரியல் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் கலந்து கொண்டு சிறப்பித்தார். தற்போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளவில்லை என சொல்ல படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.