பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் திடீர் என உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே கடந்த மாதமும் இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்தி பிரபலங்கள் மத்தியில் பிக் பி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் அமிதாப் பச்சன். தனது வயதிற்கு தகுந்தார் போல் படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது 'தங்க்ஸ் ஆப் ஹிந்டோஸ்டான்' என்றபடத்தில் அமீர்கானுடன் இணைந்து நடித்து வருகிறார். 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று அமிதாப் பச்சனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மிகவும் சோர்வாக மயக்க நிலை வரை சென்ற அவரை உடனடியாக படப்பிடிப்பு தளத்தின் அருகில் இருந்த மருத்துவமனையில் படக்குழுவினர்  சேர்த்தனர்.

அந்த மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வந்த அமிதாப் பச்சனை பார்க்க  உடனடியாக மும்பையில் உள்ள சில மருத்துவர்கள் அமிதாப் பச்சனுக்கு சிகிக்சை பார்க்க ஜோத்பூர் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது வரை அமிதாப் பச்சன் உடல்நிலையில் என்ன பிரச்சனை என்று மருத்துவர்கள் கூறவில்லை.