ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் தங்கள் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளும்படியாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து பெருமையான பதிவு ஒன்றை ட்வீட் செய்துள்ளார் ‘உயர்ந்த மனிதன்’ அமிதாப் பச்சன். 

ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் தங்கள் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளும்படியாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து பெருமையான பதிவு ஒன்றை ட்வீட் செய்துள்ளார் ‘உயர்ந்த மனிதன்’ அமிதாப் பச்சன்.

தமிழ்வாணன் இயக்கத்தில் அமிதாப் பச்சன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'உயர்ந்த மனிதன்'. தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளிலும் இப்படம் உருவாகிவருகிறது. அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகும் முதல் நேரடி தமிழ் படம் இது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் அமிதாப் பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் தமிழ்வாணன். இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அன்று, அமிதாப் பச்சனுடன் எடுத்த புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

இதன் படப்பிடிப்பு தளத்தில் ஒரு வீட்டினுள் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் புகைப்படம் மாட்டியிருப்பது போலவும், அதற்கு கீழே அமிதாப் பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பது போலவும் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை தன் ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு பகிர்ந்துள்ள அமிதாப் பச்சன்,...சிவாஜி கணேசன் எனும் தலைவனின் நிழலில் இரு சீடர்கள், எஸ்.ஜே. சூர்யாவும் நானும். சிவாஜி, தமிழ் சினிமாவின் உச்சபட்ச பழம்பெரும் அடையாளம். அவரது புகைபடம் இந்த சுவருக்கு அழகு சேர்க்கிறது.

அவர் வியத்தகு திறமை கொண்டவர். அவருக்கு எனது மரியாதையை உரித்தாக்குகிறேன். அவரது பாதம் தொட்டு வணங்குகிறேன். அவர் மாஸ்டர் .. நாம் அவருடைய சீடர்கள்’...என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவுக்குக் கீழே ‘உங்களைப் போன்ற மிக உயர்ந்த மனிதர்களிடம் மட்டுமே இத்தகைய பணிவை எதிர்பார்க்கமுடியும்’ என்று ரசிகர்கள் அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.

Scroll to load tweet…