கோலிவுட் திரையுலகில் மிகவு பிரபலமாக இருக்கும், கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கொடுத்ததில் இருந்து தற்போது வரிசையாக பல பெண்கள் MeToo ஹாஷ்டாக் பயன்படுத்தி பல பிரபலங்கள் மீது புகார்களை குவித்து வருகிறார்கள்.

இந்தியா முழுக்க மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள MeToo வில் தற்போது சிக்கி இருப்பவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். இதனால் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பாலிவுட் திரையுலகின் சிகை அலங்கார நிபுணர் சப்னா மோடி பவனானி என்பவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் மீது 'MeToo' குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், அமிதாப்பச்சனின் பாலியல் தொல்லைகள் குறித்து பல பெண்கள் கூறியதை கேட்டு இருக்கிறேன். அவர்கள் வெளியே வந்து உண்மையை சொல்ல வேண்டும்' என்று கூறியுள்ளார்.
சமீபத்தில்தான் MeToo இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து தனது டுவிட்டரில் அமிதாப் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது அவர் மீதே 'MeToo' குற்றச்சாட்டு பதிவாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருத்து பதிவிட்டு இருந்த நிலையில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு பாலிவுட் திரையுலகத்தில் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.