பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தமிழ் படங்களில் நடிக்க வில்லை என்றாலும், அவருக்கு இங்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அதே போல ரஜினிகாந்த் , பிரபு போன்ற பல தமிழ் பிரபலங்களும் அவருடைய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர் சென்னையில் கலந்து கொள்ளும் சில விழாக்களில் போதும், விருது வழங்கும் விழாக்களின் போதும், தனக்கு கோலிவுட்டில் நடிக்க நிறைய ஆசை உள்ளது என்றும், கண்டிப்பாக நேரம் வரும்போது தன்னை தமிழ் படத்தில் பார்க்கலாம் என கூறினார்.

தற்போது அதற்கான நேரம் வந்து விட்டது என தான் கூற வேண்டும். எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடித்த கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன்.

ஒரு புதிய கதையை தயார் செய்து அதை மொழி மாற்றம் செய்து அமிதாப் பச்சனுக்கு அனுப்பியுள்ளாராம். 

இப்படத்திற்கு சிவாஜி கணேசன் நடித்த உயர்ந்த மனிதன் படத்தின் பெயரை அனுமதி பெற்று வைத்துள்ளார்களாம்.

இதில் எஸ்.ஜே சூர்யா ஹீரோவாக நடிக்க அமிதாப் பச்சன் முக்கிய ரோலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவாஜி கணேசன் அமிதாப்புக்கு நல்ல நண்பர் என்பதால் கண்டிப்பாக இப்படத்திற்கு ஓகே சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.