Amitabh Bachchan learn dance from prabhu deva
பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு, நடிகர் பிரபுதேவா நடனம் கற்றுத் தருகிறார்
நடிகர் - இயக்குநர் பிரபுதேவா பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக இணைகிறார்.
இந்த 75 வயதில் கால்களை அசைத்து ஆடுவதில் சிரமம் உள்ளது என்று அமிதாப் கூறியுள்ளார்.
தன்னுடைய புகைப்படம் ஒன்றைப் பதிவேற்றி அமிதாப் டிவிட்டரில் கிண்டலாக கூறியது,
‘இந்த 75 வயதில் நான் டான்ஸ் ஆட வேண்டும்...அதுவும் ஜீனியஸான பிரபு தேவாவின் இயக்கத்தில். வேறு எந்த புகலிடமும் இல்லாமல் இன்னும் வீட்டில் தான் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது அமிதாப் ‘கோன் பனேகா க்ரோர்பதி’ என்ற பிரபல கேம் ஷோவிலும், 102 நாட் அவுட் மற்றும் ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
