Amitabh and Rishi Kapoor to join after 26 years
பாலிவுட்டின் முன்னாள் ஹீரோக்களான அமிதாப் பச்சனும், ரிஷி கபூரும் இணைந்து '102 நாட் அவுட்' எனும் புதிய படத்தில் நடித்து வருகின்றனர்.
நகைச்சுவை பாணியில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் 75 வயதுமிக்க மகன் கதாப்பாத்திரத்தில் ரிஷி கபூரும், அவரது 102 வயதுடைய தந்தையாக அமிதாப் பச்சனும் நடிக்கின்றனர்.
அமர் அக்பர் அந்தோணி, கபி கபி, நாஸீப், கூலி, போன்ற திரைப்படங்களில் அமிதாப் பச்சனும், ரிஷி கபூரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப் மற்றும் ரிஷி கபூர் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்து உள்ளனர்.
பிரபல பாலிவுட் இயக்குனர் உமேஷ் சுக்லா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்துக்கு ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருக்கிறார்.
