விஜய் தொலைக்காட்சியில் 'கல்யாணம் முதல் காதல் வரை', 'நெஞ்சம் மறப்பதில்லை' போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் அமித் பார்கவ். 

மேலும் 'மிருதன்', 'குற்றம் 23 ', உள்ளிட்ட 10 திற்கும் மேற்பட்ட  படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் த்ரிஷாவுக்கு ஜோடியாக நடித்து வரும்,  'கர்ஜனை' படம் போஸ்ட் புரோடக்ஷன் பணியில் உள்ளது.

அமித் பார்கவ், பிரபல தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனியை காதலித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை தொடர்ந்தும், ஸ்ரீரஞ்சனி பிரபல தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வந்தார்.

சில காலம் இவரை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காணவே முடியவில்லை.  பின்பு தான் தெரிந்தது ஸ்ரீரஞ்சனி கர்ப்பமாக உள்ளார் என்பது. இது குறித்த புகைப்பததையும் அமித்பார்கவ் வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் ஸ்ரீரஞ்சனிக்கு கடந்த 7 ஆம் தேதி அக்ஷய த்ரிதியை அன்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.  இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், குழந்தை கையின் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.  இதற்கு ரசிகர்கள் பலர் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.