இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பெரும் நடிப்பாளுமைகள் நடித்து வெளியாகி ஹிட்டடித்த படம் வடசென்னை. 

ஆக்சுவலாக இந்தப் படம் மூன்று பாகங்களாக வெளி வர இருக்கிறது, இதன் முதல் பாகம் மட்டுமே வெளி வந்துள்ளது, முதல் பாகம் எடுக்கையிலேயே இரண்டாம் பாகம் முப்பது சதவீதம் படமாக்கப்பட்டு விட்டது! என்றெல்லாம் அதிகாரப்பூர்வமாகவே பேசப்பட்டது.


வட சென்னை முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகத்தில் அந்த பட டீம் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சட்டென்று வெற்றிமாறனும், தனுஷும் ‘அசுரன்’ படத்தில் இறங்கினர். அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 

இந்த நிலையில் வட சென்னை முதல் பாகத்தில் அமீர் மிகச் சிறப்பாக நடித்திருந்தார், இதை ஷூட்டிங் போதேன் கவனித்திருந்தார் தனுச்,  அதனால் எடிட்டிங்கின் போது அமீரின் சிறப்பான காட்சிகள் பலவற்றை வெட்ட வைத்துவிட்டார். இப்படி தனுஷால்  கட்டான காட்சிகளும், ஏற்கனவே சேர்க்காமல் வைக்கப்பட்டிருந்த காட்சிகளையும் சேர்த்து ஒரு பக்கா வெப் சீரிஸாகவே வெளியிட்டு, தெறிக்கவிடலாம் என்று நினைக்கிறாராம் இயக்குநர் வெற்றி மாறன். 


ஒரு இயக்குநர் எனும் முறையில், ஒரு கலைஞனின் மிகப்பெரிய நடிப்பாக்கத்தை சிதைத்து அழித்துவிட கூடாது என்பது அவரின் எண்ணம். இந்த வெப்சீரிஸுக்கு தனுஷ் ஒப்புக் கொள்வாரா? என்பதுதான் இப்போதைக்கு வடசென்னை டீமின் பெரிய கேள்வி. நல்ல கலைஞனான தனுஷ் நிச்சயம் இதற்கு அனுமதி வழங்கி தனது தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். 

ஹும்! சூர்யா, கார்த்தி, ஜீவா போன்ற நடிகர்களை நடிப்பில் பட்டை தீட்டிய அமீரின் நிலையை நினைத்தாலும் ஒரு புறம் ச்சே! என்றுதான் இருக்கிறது. தனுஷ் இந்த வெப்சீரிஸுக்கு ஓ.கே. சொன்னால் அமீரின் கேரியரில் ஒரு மைல்கல்லாக இது அமையும் என்கிறார்கள் திரைத்துறை ஆளுமைகள்.