இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அறிமுகமான எமி ஜாக்சன் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தவர். தற்போது தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாகவும். விரைவில் இவர் இவருடைய காதலரை திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் ரசிகர்கள் விரும்பி பார்க்க கூடிய சூப்பர் கேர்ள் என்கிற சீரிஸில் நடித்து வரும் எமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சமீபத்தில் நடித்து வெளியான 2 . 0  படத்திலும் அப்படியே பார்க்கப்பட்டார். 

இந்நிலையில் இவர்  நீண்ட காலமாக பிசினஸ்மேன் ஜார்ஜ் பனயிடோவ் என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. ஜார்ஜ்ஜுடன் அவ்வப்போது நெருக்கமான புகைப்படங்களை வெளியிடும் எமி, ஒரு முறை கூட காதல் குறித்து பேசியது இல்லை. 

தற்போது,  புத்தாண்டைக் கொண்டாட இந்த காதல் ஜோடி ஜாம்பியா நாட்டிற்குச் சென்றுள்ளது. அங்கு ஒரு நீர் வீழ்ச்சியின் பின்னணியில் காதலருடன் நெருக்கமாக இருக்கும்  புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன். 

அதில் “1 ஜனவரி 2019. எங்கள் வாழ்க்கையின் புதிய சாகசம் ஆரம்பம். நான் உங்களைக் காதலிக்கிறேன். இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண் என நினைக்க வைத்ததற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

 

அந்தப் புகைப்படத்தில் எமியின் கையில் வைரத்திலான மோதிரம் அணிந்துள்ளார் இதனால், எமிக்கும் அவருடைய காதலர் ஜோர்குக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாகவும், இதனால் சமீப காலமாக இவர் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படாததால், இந்த வருடத்தில் இவர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் திரையுலக வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது.  எமி ஜாக்சன் திருமண செய்தி ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் மனதை தேற்றிக்கொண்டு பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.