America Forbes magazine praised the record for Ajith vivegam teaser

அமெரிக்க முன்னணி பத்திரிகையான forbes பத்திரிகையில் விவேகம் படத்தின் டீசரை விவரித்து செய்தி வெளியிட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

வீரம் வேதாளம் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் சிவா கூட்டணியில் ஸ்டைலிஷ் ஸ்பை த்ரில்லராக உருவாகிவரும் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விரைவில் மொத்த படப்பிடிப்பையும் இம்மாதம் இறுதிக்குள் முடித்து விட்டு சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. நேற்று முன்தினம் 'விவேகம்' டீஸர் வெளியானது. இதற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

'விவேகம்' டீஸருக்கு கிடைத்துள்ள வரவேற்பால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மேலும், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் படக்குழுவினருக்கு தெரிவித்துள்ளார்கள்.

இத்தனை நாள் தமிழ் சினிமாவை பாகுபலி 2 ஆக்கிரமித்து வந்தது. தற்போது அஜித்தின் விவேகம் பட டீஸர் வலம் வர ஆரம்பித்து விட்டது. நேற்று முன்தினம் வந்த இந்த டீஸர் 12 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை பெற்று வருகிறது. இந்நிலையில், பாகுபாலி-2 பாக்ஸ் ஆபீஸை தொடர்ந்து விவேகம் விவேகம் அடுத்த மிக பெரும் புயலாக உருவெடுத்து தென்னிந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

இப்படத்தின் டீசர் 12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை கடந்த முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற சாதனையை முறியடித்துள்ளது. முன்பாக ரஜினிகாந்தின் 'கபாலி' 24 மணி நேரத்திலும், பவன் கல்யாண் நடித்த 'கட்டமராயுடு' டீஸர் 57 மணி நேரத்திலும், விஜயின் 'பைரவா' 76 மணி நேரத்திலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை உறுதி படுத்தும் விதமாக அமெரிக்க முன்னணி பத்திரிகையான forbes பத்திரிகையில் 'விவேகம்' டீஸரின் சாதனையை விவரித்து செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் அந்த பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் " தல என்று அவரது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் அஜித்தின் 'விவேகம்' படத்தின் டீஸரை அவரது படைவீரர்கள் இடைவிடாமல் பார்த்து இந்த சாதனையின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதுமட்டுமல்ல, ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இணையாக உள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளிவர இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.