அமெரிக்காவை சேர்ந்த நடிகை ஒருவரின், நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்டிய ஹேக்கருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை தானே வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை பெல்லா த்ரோன்.

சமீபகாலமாக நடிகைகளின் செல்போன்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதில் அமெரிக்க நடிகைகள் மட்டும் விதிவிலக்கா என்ன? 

அமெரிக்கவை சேர்த்த நடிகையும், பாடகியுமான,  பெல்லா த்ரோன் என்பவரின் போன் மர்ம நபர் ஒருவரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 
மேலும் நடிகையை தொடர்பு கொண்டு, அந்த மர்ம நபர்  நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவேன் என தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் ஒரு நிலையில் பொறுமை இழந்த நடிகை பெல்லா தன்னுடைய புகைப்படங்களை அந்த ஹேக்கர் வெளியிடுவதற்கு முன்பு இவரே வெளியிட்டு  ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  மேலும் இது குறித்து அவரது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது ,  இரவு முழுவதும் தூங்காமல் இருந்தேன் இனி நான் நிம்மதியாக தூங்குவேன் என ஹேக் செய்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.