Asianet News TamilAsianet News Tamil

அப்பாவாக நடித்தவருடன் காதலா...? 'தங்கல்' பட நாயகி கொடுத்த அதிர்ச்சியில் திரையுலகம்!

ameerkhan and farthima sana love issue
ameerkhan and farthima sana love issue
Author
First Published Jan 21, 2018, 2:26 PM IST


சாதனை படம்: 

நிதீஷ் திவாரி இயக்கத்தில், அமீர்கான் நடிப்பில் கடந்த 2016 ம் ஆண்டு வெளியான படம் தங்கல். உண்மை கதையை பின்னணியாக  இந்த படம் வெளியாகி மிகப்பெரிய சாதனையை படைத்தது. மேலும் எண்ணற்ற விருதுகளையும் தட்டிச்சென்றது.

ameerkhan and farthima sana love issue

பாத்திமா சனா:

இதில் அமீர்கானின் மூத்த மகள் கீதாவாக நடித்து பிரபலமானவர் பாத்திமா சனா ஷேக். இவர் 1997 ம் ஆண்டு ”அவ்வை சண்முகி” படத்தின்  ஹிந்தி பதிப்பான ”சாச்சி 420” படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்தவர்.

பிரச்சனை:

ameerkhan and farthima sana love issue

இந்நிலையில், அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் தனது மனைவி குழந்தையுடன் அமைதியாக வாழ்ந்து வந்த அமீர்கான்,  தனக்கு மகளாக நடித்த பாத்திமா சனா ஷேக்குடன் நெருக்கமாக உள்ளாராம். அமைதியாக இருந்த குடும்பத்தில் புயல் வந்தது போல, பாத்திமா வந்தது அமீர்கானின் மனைவியான கிரண் ராவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

அமீர்கானால் கிடைத்த வாய்ப்பு:

ameerkhan and farthima sana love issue

இந்நிலையில் பட வாய்ப்புக்காக தேடி அலையும் பாத்திமாவுக்கு, அமீர்கானுடன் நெருக்கமாக இருப்பதால் யாரும் அவருக்கு வாய்ப்பு அளிக்க விரும்பவில்லையாம். இந்நிலையில் ”தங்கல்” படத்திற்கு பிறகு அமீர்கானுடன் இணைந்து ”தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்” படத்தில் நடித்து வருகிறார் பாத்திமா சனா ஷேக். இப்படத்தில் பாத்திமாவுக்கு வெயிட்டான கேரக்டராம். இந்த படத்தில் இவரை நடிக்க பரிந்துரை செய்ததே அமீர்கான்தான் என்று கிசுகிசுக்கிறார்கள். இதில் மற்றொரு முன்னனி நடிகையான கேத்ரினா கைஃபிற்கு முக்கியத்துவம் இல்லையாம். அமீரும், பாத்திமாவும் நெருக்கமாக உள்ளார்கள் என்பதை உறுதி செய்யும் விதமாக, ”தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்” படத்தில் அமீர், பாத்திமாவை நடிக்க வைத்ததில் ஆச்சர்யம் இல்லை என பாலிவுட் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். இதிலிருந்து பாத்திமா சனா ஷேக்குக்கு அமீரின் படத்தை தவிர வேறு வாய்ப்புகள் கிடைக்காது போல!

Follow Us:
Download App:
  • android
  • ios