ameer khan help for kamalahassan wife sariha

நடிகர் கமலஹாசனின் இரண்டாவது மனைவி சரிகா கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2004 ஆம் ஆண்டு கமலஹாசனிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். ஆனால் இவர்களுடைய மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் திரையுலகில் இருப்பதால், அப்பா அம்மா இருவருடனும் இல்லாமல் தனித்து வசித்து வருகிறார். இளைய மகள் அக்ஷரா ஹாசன் தந்தை கமலுடன் வசித்து வருகிறார். இருவரும் அவ்வப்போது தனித்தனியே தாய் தந்தையரைப் பார்த்து வருகின்றனர் என்றாலும், தாய் சரிகா மட்டும் தனித்தே இருந்துவருகிறார். 

கமலிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், தன்னுடைய தாயாருடன் வசித்து வந்த இவர், தாய் இறந்த பின்னர், இப்போது சம்பாதித்து வாங்கிய வீடு கூட தனக்குச் சொந்தமாக இல்லாமல் தவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு கோர்ட் கேஸ் என அலைந்து கொண்டிருக்கிறார்.

மும்பையில் சரிகா சம்பாதித்து அவருடைய தாயார் பெயரில் அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கினார். ஆனால் அவருடைய தாயார் அபார்ட்மெண்ட் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் சரிகாவின் பெயருக்கு மாற்றம் செய்யாமல், இவர்களுடைய குடும்ப நண்பர் டாக்டர் விக்ரம் தாக்கர் என்பவர் பெயருக்கு உயில் எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார்.

அவர் இறந்த பிறகு இந்தச் செய்தி வழக்கறிஞர் மூலம் வெளியே வந்தது. அதன் பின் தான், கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய வீடு தனக்கு இல்லையே என்கிற அதிர்ச்சியில் மூழ்கினார் சரிகா. இதைத் தொடர்ந்து இந்த வீட்டை கைப்பற்றியே ஆக வேண்டும் என அவர் கோர்ட்டுக்கும் சென்றுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் சகோதரி நுஸ்ஸத் சரிகாவின் நெருகிய தோழி. அவர், தன் தோழி சரிகா படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் இதனை தன் சகோதரர் அமீர்கானிடம் கூறியுள்ளார். இதனால் வருத்தம் அடைந்த அவர் சரிகாவிற்கு உதவ முன் வந்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.