'வீரசேகரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரளாவை சேர்ந்த நடிகை அமலாபால். இவர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கிய ‛தெய்வத்திருமகள் படத்தில் நடித்த போது  டைரக்டர் விஜய்யுடன் இவருக்கு காதல் மலர்ந்தது. 

அதையடுத்து விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கிய 'தலைவா' படத்திலும் அமலாபால் நாயகியாக நடித்தார். பின் இவர்களுடைய காதல் விஷயம் தீயாய் பரவ இருவரும் தங்களுடைய காதலை பெற்றோரிடம் தெரிவித்து இரு வீட்டு சம்மதத்துடன் கடந்த 2014-ல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் திரையுலகில் இருந்து விலகி இருந்த அமலாபால், 'அம்மா கணக்கு' படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை தொடந்து பல படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் விஜய் குடும்பத்தினர் அமலாபால் தொடர்ந்து படங்களில் நடிக்க கூடாது என கூறியதால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இவர்களுடைய விவாகரத்து வரை வந்ததாக கூறப்பட்டாலும், இதுவரை விஜய் மற்றும் அமலாபால் இருவருமே தங்களுடைய விவாகரத்துக்கான காரணம் குறித்து இதுவரை எதுவும் கூறியதில்லை. 

விவாகரத்து பெற்ற பின் இருவருமே தங்களுடைய வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது நடிகை அமலாபால் இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார். 

ஏற்கனவே ஏ.எல்.விஜய் இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள, சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், அவருக்கு பெற்றோர்கள் தீவிர பெண் தேடுதலில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து அமலாபாலிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர்... முதல் திருமணம் என் விருப்பப்படி நடந்தது, ஆனால் நான் இரண்டாவது திருமணம்  என் பெற்றோர் விருப்பப்படி தான் இருக்கும் என கூறியுள்ளார். இதன் மூலம் அமலாபால் அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிட்டார் என்பது அவர் பேச்சில் இருந்தே தெரிவதாக ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.