நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா இயக்கவிருப்பதாக கூறப்பட்ட படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

ஆனால், படக்குழுவினர் கேட்ட தேதியில் கால்ஷீட் இல்லாத காரணத்தால், இந்த படத்திலிருந்து திடீர் என அமலா பால் விலகியுள்ளதாகவும்,  இவருக்கு பதிலாக தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை மேகா ஆகாஷ் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று முடிந்த நிலையில்,  அடுத்த கட்ட படப்பிடிப்பு,  ஊட்டியில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.