நடிகை அமலா பாலின் முன்னாள் கணவர் இயக்குனர் ஏ.எல் விஜய்க்கும், ஐஸ்வர்யா என்கிற மருத்துவருக்கும் ஜூலை 11ம் தேதி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த செய்தி அனைவருடைய கவனத்தை பெற்ற நிலையில், இதனை கண்டும் காணாதது போல் இருந்து வருகிறார் நடிகை அமலா பால்.

மேலும் தற்போது அமலா பால், என்ன மன நிலையில் உள்ளார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அமலாபால் இந்த திருமணத்தை சிறிதும் கண்டு கொள்ளாமல் அடுத்ததாக தான் நம்பியிருக்கும் திரைப்படமான 'ஆடை' படத்தின் பிரமோஷன் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளார்.

ஒவ்வொரு நாளும் 'ஆடை' படத்தைப் பற்றிய ஏதேனும் ஒரு தகவலை அவர் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் ஆடை படத்தின் டீசர் 10 மில்லியனை கடந்ததற்கும், ட்ரெய்லர் 4 மில்லியனை கடந்ததற்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து சத்தம் இல்லாமல் தன்னுடைய படத்தை ப்ரோமோஷன் செய்து வருகிறார். மேலும் விஜயின் திருமணம் அமலாவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பது இதில் இருந்து தெரிகிறது.