Asianet News TamilAsianet News Tamil

தனுஷ் தான் விவாகரத்திற்கு காரணமா...??? முதல் முறையாக அமலாபால் ஓபன் டாக்.....!!!

amalapaul open-talk
Author
First Published Dec 26, 2016, 2:35 PM IST


பிரபல நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை சமீபத்தில் விவாகரத்து செய்தார்   இந்த  பிரிவு குறித்து  பல முறை  தன் கருத்தை பதிவு செய்தார் அமலாபால்.

இந்நிலையில் சமீபகாலமாக நடிகர் தனுஷுடன் அமலாபாலை இணைத்து பேசி வருகிறார்கள். அதன் காரணமாகத்தான் வடசென்னை மற்றும் vip2 என தொடர்ந்து தனுஷ் பட வாய்ப்புகளை அமலாபால் கைப்பற்றியதாக கூறப்பட்டது.

இது பற்றி முதல் முறையாக ஓபன் டாக்  அமலா. "இந்த விஷயம் கேள்விப்பட்டவுடன் எனக்கு ரொம்ப அசிங்கமாகவும் மனக்கஷ்டமாகவும் இருந்தது என்றும்.

தனுஷ் என்னை விஜய்யுடன் சேர்த்து வைக்க தான் நினைத்தார், அதற்காக பல  முயற்சிகளை தனுஷ் எடுத்தார் என கூறியுள்ளார் அமலா.

மேலும் அதன் பின் எந்த ஒரு வாய்ப்புக்கும் நான் தனுஷை தேடி போகவில்லை, வடசென்னை, வி.ஐ.பி - 2 என்னை தேடி வந்த வாய்ப்புகள் என்றும் கூறியுள்ளார்.

 தனக்கும் தன்னுடைய கணவர் விஜய்க்கும் சில விஷயங்கள்  ஒத்து போகவில்லையே தவிர வேறு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios